November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘அம்பிகையின் கோரிக்கைகளில் ஒன்றையேனும் நிறைவேற்ற பிரிட்டன் நடவடிக்கை எடுக்க வேண்டும்’

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அம்பிகை செல்வகுமாரின் நான்கு கோரிக்கைகளில் ஒன்றையேனும் நிறைவேற்ற பிரிட்டன் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழர் அமைப்பொன்று ஐநா மனித உரிமைகள் பேரவையில் கோரிக்கை விடுத்துள்ளது.

மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அம்பிகை செல்வகுமார் உலகத் தமிழ் மக்களின் உரிமைகளை முன்வைத்து, போராடி வருவதாகவும் குறித்த அமைப்பின் பிரதிநிதி ஐநா அமர்வில் உரையாற்றும் போது குறிப்பிட்டுள்ளார்.

அகிம்சை வழியில் உண்ணாவிரதம் இருந்த பார்திபன் திலீபன் உயிரிழந்து 34 வருடங்களின் பின்னர், லண்டனில் அம்பிகை உண்ணாவிரதம் ஆரம்பித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் சிங்கள அரசின் அடக்குமுறைகளால் நீண்ட காலமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.