
தென்னை, பனை மற்றும் கிதுல் உள்ளிட்ட விவசாயப் பண்ணை உற்பத்திகளுக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ கிளிநொச்சியில் இன்று மஞ்சள் உற்பத்தியை ஆரம்பித்து வைத்துள்ளார்.
இயக்கச்சி பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றினால் அமைக்கப்பட்டுள்ள விவசாயப் பண்ணையில் மஞ்சள் கன்றுகளை நட்டு வைத்து அந்தத் திட்டத்தை அமைச்சர் ஆரம்பித்து வைத்தார்.

இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர் அங்கஜன் இராமநாதன், பனை மற்றும் தென்னை அபிவிருத்தி சபை தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.