இலங்கை மீதான தீர்மானத்துக்கு தலைமை தாங்குவது பிரிட்டனின் நட்புறவற்ற செயல் என்று வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன சாடியுள்ளார்.
ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீதான புதுப்பிக்கப்பட்ட வரைவுத் தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை மீது முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானம் ‘நாட்டின் இறையாண்மையை மீறுவதாகும்’ என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இலங்கை பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மீளாய்வு செய்ய வேண்டும் என்றும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டும் என்றும் தீர்மானத்தை முன்வைத்துள்ள நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன.
இவ்வாறானதொரு தீர்மானத்துக்கு தலைமை தாங்குவது, ‘ஒரு பொதுநலவாய உறுப்பினரான இலங்கை மீது பிரிட்டனின் நட்புறவற்ற செயலாகும்’ என்றும் வெளியுறவு அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.