காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று திங்கட்கிழமை திருகோணமலையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை, சிவன் கோவில் முன்றிலில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.
இதன்போது ‘அரசியல் கைதிகளை விடுதலை செய்’, ‘ஐக்கிய நாடு சிறந்த தீர்வை பெற்றுத் தா’, ‘சாகும் வரை உண்ணாவிரதம்’, ‘காணாமல் ஆக்கப்பட்டோர் எங்கே’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.