கிளிநொச்சி பிரதேசத்தில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் சட்டவிரோத மணல் அகழ்வுடன் தொடர்புடைய 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரதேசத்தில் சட்டவிரோத மணல் அகல்வினை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 13, 14 ஆம் திகதிகளில் பொலிஸார் விசேட சுற்றிவளைப்புகளை முன்னெடுத்திருந்தனர்.
இதன்படி ஊரியான் , முரசுமோட்டை , உமையாள் புரம் , உருத்தரபுரம் , திருவையாறு ஆகிய பகுதிகளில் மணல் அகழ்விற்காக பயன்படுத்தும் 8 உழவு இயந்திரங்களும் , 9 டிப்பர் வண்டிகளை கைப்பற்றிய பொலிஸார் அந்த வாகனங்களில் இருந்த 17 பேரையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் சம்பவம் தொடர்பில் வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.