யாழ்ப்பாணத்தில் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடும் சுகாதார தொண்டர்களில் ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நிரந்தர நியமனத்தை வலியுறுத்தி கடந்த முதலாம் திகதி முதல் ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.
பின்னர் கடந்த 8 ஆம் திகதி முதல் அவர்கள் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
அவர்களின் உணவுத் தவிர்ப்புப் போராட்டம் இன்றைய தினம் 8 ஆவது நாளாகவும் தொடரும் நிலையில், போராட்டத்தில் ஈடுபடும் பெண்ணொருவரின் உடல்நிலை மோசமடைந்துள்ளது.
இதனையடுத்து அந்தப் பெண் அவசர நோயாளர் அம்பியூலன்ஸ் மூலம் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
போராட்டம் இடம்பெறுகின்ற இடத்திற்கு ஒரு சில தமிழ் அரசியல்வாதிகள் வந்தபோதும், அரசாங்கத்தை பிரதிநிதித்தும் அரசியல்வாதிகளோ, அதிகாரிகளோ இதுவரை தம்மை பார்க்க வரவில்லை என போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் தெரிவிக்கின்றனர்.