May 23, 2025 19:40:44

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பு கிராண்ட்பாஸ் தீ விபத்தில் 50 வீடுகள் சேதம்!

File Photo

கொழும்பு, கிராண்ட்பாஸ் – கஜிமாவத்தை பகுதியில் இடம்பெற்ற தீ விபத்தில் 50 வீடுகள் சேதமடைந்துள்ளன.

இன்று அதிகாலை 3 மணியளவில் திடீரென அங்குள்ள குடியிருப்பு பகுதியில் தீ பரவியதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

கொழும்பு மாநகர சபையின் 8 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் பிரதேசவாசிகளும், பொலிஸாரும் இணைந்து தற்போது தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

கஜிமாவத்தை பகுதியில் நெருக்கமாக 250 வீடுகள் அமைந்துள்ள நிலையில் அவற்றில் 50 வீடுகளுக்கு தீ பரவியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படாத போதும், பெருமளவான பொருட்கள் தீயில் எரிந்து கருகியுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன் சம்பவம் தொடர்பாக கிராண்ட்பாஸ் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.