வரலாற்று ஆய்வாளர் அருணா செல்லத்துரையின் ‘பண்டாரம்-வன்னியனார்’ என்ற ஆய்வு நூலின் வெளியீட்டு விழா இன்று இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வு வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.
ஜனாதிபதி சட்டத்தரணி மு.சிற்றம்பலம் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வாழ்த்துரையை தேசிய கல்வியியற் கல்லூரியின் ஓய்வுநிலை பீடாதிபதி க. சுவர்ணரயா நிகழ்த்தியுள்ளார்.
அதனைத்தொடர்ந்து நூலை ஜனாதிபதி சட்டத்தரணி சிற்றம்பலம் வெளியிட்டு வைத்ததுடன், நூலின் முதற்பிரதியை வவுனியா பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் வீ.ஜெகசோதிநாதன் பெற்றுக்கொண்டார்.
அத்தோடு, நூலின் மதிப்பீட்டு உரையை புளியங்குளம் ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தின் முகாமையாளர் சு.ஜெயச்சந்திரன் நிகழ்த்தியதுடன், பதிலுரையை நூல் ஆசிரியரும், நன்றியுரையை மருத்துவர் செ.மதுரகனும் நிகழ்த்தியிருந்தனர்.
இதேவேளை, ஆய்வாளர் அருணா செல்லத்துரையின் வன்னி மண்சார்ந்த வரலாற்று ஆய்வு நூல்களில் இது 9 ஆவது நூல் என்பதும் குறிப்பிடத்தக்கது.