
twitter/ranil wickremesinghe
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தனது அரசியல் அனுபவங்களை மையப்படுத்தி புத்தகம் ஒன்றினை எழுதிக்கொண்டிருப்பதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சியின் தேசியப் பட்டியல் வெற்றிடம் இன்னும் நிரப்பப்படாது உள்ள நிலையில், ரணில் விக்கிரமசிங்கவையே அதற்கு நியமிக்க வேண்டும் என்று கட்சியின் மூத்த உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனினும் ரணில் விக்கிரமசிங்க அதனை நிராகரித்துள்ளார்.
தான் தேர்தலில் வெற்றி பெறாத நிலையில் மக்கள் பிரதிநிதியாக பாராளுமன்றத்திற்கு செல்வது பொருத்தமில்லை எனவும் அதற்கு தகுந்த ஒருவரை தெரிவு செய்து அனுப்புமாறும் அவர் கட்சியினரிடம் கூறியுள்ளார்.
அத்தோடு கடந்த 25 ஆண்டுகால தலைமைத்துவம் மற்றும் கடந்துவந்த அரசியல் பயணம் குறித்த புத்தகத்தினை எழுதிக்கொண்டிருப்பதாகவும்தனக்கு சற்று ஓய்வு தேவைப்படுவதாகவும் அவர் தன்னை சந்திக்க வந்திருந்த கட்சியின் மூத்த உறுப்பினர்களிடம் கூறியுள்ளார்.