November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜனாஸா அடக்கம் தொடர்பான பிரச்சினை முழுமையாகத் தீர்க்கப்பட்டுள்ளது என்கிறார் இராணுவத் தளபதி

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அடக்கம் செய்யப்படாமல் இருந்த கொரோனா தொற்றினால் உயிரிழந்த 45 சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதேநேரம், கொவிட் தொற்றால் மரணித்த சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பான பிரச்சினை முழுமையாகத் தீர்க்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா சடலங்கள் தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இராணுவத்தின் ஒத்துழைப்புடன் இதுவரையில் 45 சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், கொரோனா சடலங்களை அடக்கம் செய்வதில் அல்லது அது தொடர்பாக விண்ணப்பிப்பதில் பிரச்சினைகள் ஏற்படாது எனவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்தின் ஒட்டமாவாடி பகுதியில், உயரமான மைதானமொன்றில் கொரோனாவால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டு வருகின்றது.

இதேவேளை, கொவிட்-19 நோய் காரணமாக உயிரிழப்பவர்களை நல்லடக்கம் செய்யும் ஓட்டமாவடி, மஜ்மா நகருக்கு இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா நேற்றைய தினம் விஜயமொன்றையும் மேற்கொண்டுள்ளார்.

This slideshow requires JavaScript.