January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘புலமைப் பரிசில், உயர்தரப் பரீட்சைகளைப் பிற்போடத் தீர்மானம்’: பரீட்சைகள் ஆணையாளர்

இலங்கையில் 2021 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப் பரிசில் மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகளை எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடத்தாமல் இருக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் உட்பட கல்வி அமைச்சின் அதிகாரிகளுடன் மேற்கொண்ட கலந்துரையாடலில் இவ்விடயம் தீர்மானிக்கப்பட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பி. பூஜித தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் நிலையில், தரம் 5 புலமைப் பரிசில் மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தர மாணவர்களுக்கான பாடப் பரப்புகளைக் கற்பிக்கப் போதுமான கால அவகாசம் கிடைக்காமையைக் கருத்தில் கொண்டே, இப் பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன.

மேற்படி, பரீட்சைகள் இரண்டையும் நடத்துவதற்கான திகதிகள் இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை என்றும் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.