May 29, 2025 23:16:20

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சிறுவர் தினத்தில் கவனயீர்ப்பு போராட்டம்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்தியுள்ளனர்.

யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

”இராணுவத்தினராலும், துணை இராணுவக் குழுவினராலும் கொண்டு செல்லப்பட்டு காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது” என்ற கோசத்தை எழுப்பியவாறு அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.