
அரசாங்கத்திற்குள்ளே எதிர்க்கட்சி ஒன்றை உருவாக்கும் முயற்சி இடம்பெற்று வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமைத்துவம் மற்றும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பிலும் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் சிலர் தொடர்ச்சியாக விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், ‘ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் அரசியல் தலையீடுகள் ஏற்பட்டுள்ளதாக’ அமைச்சர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்தோடு ‘இஸ்லாமிய அடிப்படைவாதிகளை அரசாங்கத்தில் இணைத்துக்கொண்டு பயணிக்க சிலர் முயற்சிப்பதாகவும் இதனால் அரசாங்கத்தில் பாரிய குழப்பங்கள் ஏற்படுவதாகவும்’ அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்தில் ஒரு சில தலைவர்கள் தொடர்பில் விமர்சன கருத்துக்களை தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.