மாகாணசபைகள் விடயத்தில் இந்தியா தலையிடவோ- கட்டாயப்படுத்தவோ முடியாது என்று மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் ஜனாதிபதியினால் மட்டுமே தீர்மானம் எடுக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பாதுக்கை பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
”இலங்கை என்பது சுதந்திரமான இறையாண்மை கொண்ட நாடு, இதில் வெளியாரின் தலையீடுகள் இருக்கக் கூடாது.
இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் ஊடாகவே 13 ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டது.
அதன்படி இந்தியா பல நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டியிருந்தது, அவற்றில் ஒன்றான விடுதலைப் புலிகளை நிராயுத பாணியாக்கும் நிபந்தனையை இந்தியா நிறைவேற்றவில்லை.
இதனால், அந்த ஒப்பந்தம் எந்த அளவிற்கு பயனுள்ளதாக இருக்கும் என்பது கேள்விக்குரியதாக உள்ளது” என்று வீரசேகர கூறியுள்ளார்.