January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் கலந்துகொண்டனர்

சர்வதேச நீதியை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டு தமது ஆதரவை வழங்கியுள்ளனர்.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி, யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் நல்லூர் – நல்லை ஆதீனம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் 14 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்தப் போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிறிதரன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் இன்றைய தினம் கலந்து கொண்டு ஆதரவு வழங்கியுள்ளனர்.

அதேபோல காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், அரசியல் பிரதிநிதிகள், சிவில் அமைப்பினர், மதத் தலைவர்கள் எனப் பலரும் தமது ஆதரவினை தெரிவித்துள்ளனர்.