‘இலங்கை ஜமாஅதே இஸ்லாமி’ அமைப்பின் முன்னாள் தலைவர் ரசீத் ஹஜ்ஜுல் அக்பர், பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாட்டில் வஹாப் மற்றும் ஜிஹாத் வாதங்களை பரப்பும் செயற்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மாவனெல்லை பிரதேசத்தை சேர்ந்த இவர், கொழும்பு தெமட்டகொட பிரதேசத்தில் வைத்து நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
‘இலங்கை ஜமாஅதே இஸ்லாமி’ அமைப்பினால் வெளியிடப்படும் ‘அல்ஹஸனாத்’ சஞ்சிகையில் இனங்களுக்கிடையே முரண்பாடுகளை ஏற்படுத்தக் கூடிய வஹாப் மற்றும் ஜிஹாத் வாதங்களை பரப்பும் வகையிலான கட்டுரைகள் வெளியிட்டமை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளை அடிப்படையாக கொண்டே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.