July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கொழும்பு துறைமுக மேற்கு முனைய அபிவிருத்தி வேலைத்திட்டம் ஜூனில் ஆரம்பம்’

‘கொழும்பு துறைமுக மேற்கு முனைய அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பில் இந்தியாவின் அதானி நிறுவனத்துடன் முன்னெடுத்த பேச்சுவார்த்தைகள் நிறைவுக்கு வந்துள்ளதாகவும், ஜூன் மாதத்தில் துறைமுக அபிவிருத்தி வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும்’ துறைமுக அதிகார சபையின் தலைவர் ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

‘அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் 85 வீத உரிமம் இந்தியாவிற்கும் 15 வீத உரிமம் இலங்கைக்கும் என்ற வகையில் உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டுள்ளதாவும்’ அவர் தெரிவித்துள்ளார்.

‘மேற்கு முனைய அபிவிருத்திக்கான அறிக்கையை விரைவில் ஜனாதிபதியிடம் ஒப்படைக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதனை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான உடன்படிக்கையை கைச்சாத்திட்டு வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளோம் எனக் கூறிய அவர், இந்த உடன்படிக்கைக்கு அமைய 85 வீத உரிமம் அபிவிருத்தியை மேற்கொள்ளும் நிறுவனத்திற்கும் 15 வீதம் துறைமுக அதிகார சபைக்கும் என்ற வகையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நடுப்பகுதியில் குறிப்பாக ஜூன் மாதமளவில் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படும்’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.