January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வவுனியா தூய சதா சகாய அன்னையின் திருவிழா!

வவுனியா – சகாயமாதாபுறம், தூய சதா சகாய மாதா ஆலயத் திருவிழா இன்று நடைபெற்றது.

திருவிழா திருப்பலி காலை 7:15 மணியளவில் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி அன்ரனி விக்டர் சோசை அடிகளாரின் தலைமையில் கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து திருச்சொரூப பவனி இடம்பெற்றது.

இதன்போது பங்குத் தந்தை அருட்பணி ஜெயபாலன் அடிகளார், வவுனியா மறைக்கோட்ட முதல்வர் அருட்பணி ராஜநாயகம் அடிகளார், உதவிப் பங்குத் தந்தை அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளார்,மகாறம்பைக்குளம் பங்குத் தந்தை அருட்பணி மரியக்கிலைன் அடிகளார் , அருட்பணி பெணி அடிகளார், தரனிக்குளம் பங்குத்தந்தை அருட்பணி ஆரோக்கியசாமி அடிகளார், உள்ளிட்ட அருட் தந்தையர்கள், அருட் சகோதரிகள் பலரும் கலந்துகொண்டனர்.