July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தென்னாபிரிக்காவில் பரவும் புதிய வகை வைரஸ் தொற்றுடன் இலங்கையில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்

File Photo

தென்னாபிரிக்காவில் பரவிவரும் வீரியம் கொண்ட புதியவகை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஒருவர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆய்வு நிறுவகத்தின் பணிப்பாளர் பேராசிரியர் சந்திம ஜீவசுந்தர தெரிவித்துள்ளார்.

தென்னாபிரிக்காவில் பரவிவரும் வீரியம் கொண்ட உருமாறிய கொவிட் – 19 (B.1.351) என்ற புதியவகை வைரஸ் தொற்று குறித்த நபர் உள்ளாகியுள்ளதாக பரிசோதனைகளில் தெரியவந்துள்ளதாக பேராசிரியர் சந்திம ஜீவசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

தன்சானியாவில் இருந்து வருகை தந்து தற்போது தனிமைப்படுத்தல் நிலையத்தில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள மஹியங்கனை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கே இவ்வாறு புதிய வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இலங்கையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் 115 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி நாட்டில் இதுவரையில் மொத்தமாக 86,989 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், இவர்களில் 83,561 பேர் பூரண குணமடைந்துள்ளதாகவும், கொவிட் தடுப்புக்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.