மன்னாரில் முன்னெடுக்கப்படும் காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தை சீ விசேட குழுவொன்று அங்கு சென்று.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியில், இலங்கை மின்சார சபையினால் மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, நடுக்குடா பகுதியில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
மின்வலுத் துறை அமைச்சர் டலஸ் அழகபெரும, காற்றாலை-சூரியசக்தி மின்வலுத் துறை இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க தலைமையிலான விசேட குழுவினர் நேற்று இங்கு சென்று பணிகளை ஆராய்ந்துள்ளனர்.
30 காற்றாடிகளைக் கொண்டு 103.5 மெகா வாட் மின்சாரத்தை பெறும் இலக்குடன் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.