
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இதன்போது வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலயத்திற்குச் சென்று விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், நல்லை ஆதீனத்திற்கு சென்று ஆதீன குருமுதல்வரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
அத்தோடு இந்தியாவினால் அமைக்கப்படும் யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்திற்கும் சென்று நிர்மாணப் பணிகளை பார்வையிட்டார்.
இதனையடுத்து யாழ். பொது நூலகத்தை பார்வையிட்டதுடன், மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது யாழ். இந்திய துணைதூதர் பாலச்சந்திரனும் கலந்துகொண்டிருந்தார்.