November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா கட்டுப்பாடுகளுக்கு நடுவே இலங்கையில் இடம்பெற்ற சிவராத்திரி வழிபாடுகள்

இலங்கையில் உள்ள இந்து ஆலயங்களில் சிவராத்திரி பூஜை வழிபாடுகள் சிறப்பாக இடம்பெற்றன.

கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் சுகாதார கட்டுப்பாடுகளுடன் சிவராத்திரி நிகழ்வுகள் நடத்தப்பட்டன.

மன்னார் திருக்கேதீஸ்வரம்

மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட்டு மகா சிவராத்திரி நிகழ்வுகள் நடைபெற்றன.

பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான திருக்கேதீஸ்வரத்தில் வழமையாக சிவராத்திரி விரதத்தின் போது பல பிரதேசங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ளும் நிலையில், தற்போதைய கொரோனா தொற்று நிலைமையால் இம்முறை மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடனேபூஜை நிகழ்வுகள் இடம்பெற்றன.

This slideshow requires JavaScript.

யாழ். கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம்

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றாகிய யாழ்ப்பாணம் கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்தில் மகா சிவராத்திரி உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

கொரோனா பரவல் அச்ச நிலைமை காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட அடியார்களுடன் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சிவராத்திரி பூசை வழிபாடுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.

சிலாபம் முன்னேஸ்வரம் ஆலயம்

பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றாகிய சிலாபம் முன்னேஸ்வரம் ஆலயத்திலும் மகா சிவராத்திரி உற்சவம் மிகவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

லிங்கோற்பவருக்கு விஷேட பூசை வழிபாடுகளும் விசேட அபிஷேக ஆராதனைகளும் இடம்பெற்றன.

மட்டுப்படுத்தப்பட்ட அடியவர்களுடன் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சிவராத்திரி பூஜை வழிபாடுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வர ஆலயம்

இலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்திலும் சிவராத்திரி விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.

ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சோதிலிங்க குருக்கள் தலைமையில் விஷேட வழிபாடுகளுடன் நான்கு சாமப் பூசைகளும் இடம்பெற்றன.

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயம்

இலங்கையின் பிரசித்தி பெற்ற அமிர்தகழி மட்டு. மாமாங்கேஸ்வர ஆலயத்திலும் சிவராத்திரி பூஜை வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்றன.

ஆலய பிரதம குரு சிவஸ்ரீ ஆதி சௌந்தரதராஜக் குருக்கள் தலைமையில் வழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன. அத்தோடு அபிஷேகம் மற்றும் 4 சாமப் பூசைகளும் இடம்பெற்றன.

This slideshow requires JavaScript.

மலையகத்தில் சிவராத்திரி பூஜை

மகா சிவராத்திரி விரதத்தையொட்டி மலையகத்திலுள்ள ஆலயங்களிலும் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.

அந்தவகையில் நுவரெலியா ஸ்ரீ லங்காதீஸ்வர ஆலய காயத்திரி பீடத்தில் மகா சிவராத்திரி விழா மிகவும் பக்தி பூர்வமாக நடைபெற்றது.

இந்தப் பூஜையில் விநாயகர் வழிபாடு, பாலாபிஷேகம், தேன் அபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம், சங்காபிஷேகம், திரவிய அபிவிஷேகம் உட்பட பல்வேறு அலங்கார அபிஷேகங்கள் இடம்பெற்றதுடன் இரவு முழுவதும் நான்கு சாமப்பூஜைகளும் சிறப்பாக நடைபெற்றன.

This slideshow requires JavaScript.