
திருகோணமலை தென்கயிலை ஆதீனத்தின் சிவன் மலையில் 108 சிவலிங்கங்கள் நிறுவப்பட்டுள்ளன.
மகா சிவராத்திரி நாளான நேற்று சிவலிங்கங்கள் மலை முழுவதும் நிறுவப்பட்டு விசேட வழிபாடுகள் நடத்தப்பட்டன.
2020 ஆகஸ்ட் 5 ஆம் திகதி சிவலிங்கங்கள் நிறுவப்படுவது தொடர்பிலான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்து.
இதன்படி கடந்த செப்டம்பர் மாதத்தில் தென்கயிலை ஆதீனம், மலையில் மூன்று சிவலிங்கங்களை நிறுவியது.
இதனை தொடர்ந்து நேற்று அங்கு 105 சிவலிங்கங்கள் நிறுவப்பட்டுள்ளன.
புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்பில் அவர்களின் பெயர்களில் மலை முழுவதும் அவை நிறுவப்பட்டுள்ளதாக தென்கயிலை ஆதீனம் தெரிவித்துள்ளது.