January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஈஸ்டர் தாக்குதல்: முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக சிஐடி-யில் முறைப்பாடு

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கைக் கத்தோலிக்கத் திருச்சபையின் பிரதிஷ்டைக் குழுத் தலைவர் சிரந்த அமரசிங்க இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களுக்கு அப்போது பாதுகாப்பு அமைச்சுக்கு பொறுப்பாக இருந்த முன்னாள் ஜனாதிபதியே பொறுப்புக் கூற வேண்டியவர் என்று குறிப்பிட்டே அந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை எடுக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் கோரிக்கை சிரந்த அமரசிங்க விடுத்துள்ளார்.