வரலாற்று சிறப்பு மிக்க கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்தின் தேர்த் திருவிழா இன்று நடைபெற்றது.
பெப்ரவரி 26 திகதி கொடியேற்றத்துடன் மகோற்சவம் ஆரம்பமானதுடன், 14 ஆம் நாளான இன்று தேர்த் திருவிழா இடம்பெற்றது.
இன்று காலை நடைபெற்ற வசந்த மண்டப பூஜைகளை தொடர்ந்து, நகுலாம்பிகாதேவி சமேத நகுலேஸ்வர சுவாமியின் தேர்த் திருவிழா ஆரம்பமானது.
தேர்த் திருவிழாவின் பின்னர், இன்று இரவு சிவராத்திரி விசேட பூஜைகள் நடைபெற்று, 15 ஆம் நாளாகிய நாளை கீரிமலை புனித கண்டகி தீர்த்தத்தில் தீர்த்தோற்சவம் இடம்பெறவுள்ளது.