
“பௌத்த தீவிரவாதம் இல்லையென விமல் வீரவன்ச கூறுகின்றார். அதை நான் ஏற்கின்றேன். அதேபோன்று இஸ்லாமிய தீவிரவாதமும் இல்லை” என பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்ததாக கூறப்படும் கருத்து தொடர்பாக தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிலிலேயே ரிஷாட் பதியுதீன் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் பதிவிட்டுள்ள அந்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
“பௌத்த தீவிரவாதம் இல்லையென விமல் வீரவன்ச கூறுகின்றார். அதை நான் ஏற்கின்றேன். அதேபோன்று இஸ்லாமிய தீவிரவாதமும் இல்லை. எனினும் ஒரு சிலர் தமது குறுகிய இலாபத்திற்காக இஸ்லாம்,பௌத்த மதத்தினைப் பயன்படுத்துகின்றனர்.அதனூடாக எம்மை அழிக்கின்றனர். நாம் அனைத்து அடிப்படைவாதத்திற்கு எதிராகவும் ஒன்றுபடுவதே அவர்களுக்கு விடும் சவால்” என கூறியுள்ளார்.
Wimal Weerawansa claims there is no Buddhist extremism. I agree. Likewise there is no Islamic extremism. However extremists are exploiting Islam and Buddhism to pursue sinister motives.They only devastate our people. I believe we must stand together #AgainstAllTypesOfExtremism.
— Rishad Bathiudeen (@rbathiudeen) March 11, 2021
இதேவேளை, ‘ஆணைக்குழு அறிக்கையைத் தாண்டிய இஸ்லாமிய அடிப்படைவாதம்’ என்ற தலைப்பில் நடைபெற்ற மாநாட்டில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்த கருத்துக்கு எதிராக அவர் மீது விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் முறைப்பாடொன்றை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.