ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை மூலம் பௌத்த அமைப்புகள் மற்றும் சிங்கள தலைவர்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு, கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் சத்தியாக்கிரகப் போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மூன்று பௌத்த பீடங்களின் பிக்குகளும், சிங்கள அமைப்புகளை சேர்ந்தோரும் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
மேலும், ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் தாக்குதலின் சூத்திரதாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஈஸ்டர் தாக்குதல் அறிக்கையில் பொதுபல சேனா உட்பட பௌத்த அடிப்படைவாத அமைப்புகள் தடை செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் பௌத்த அடிப்படைவாத அமைப்புகள் இல்லை என்றும் அறிக்கையில் அவ்வாறாக கூறப்பட்டுள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.