January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பில் எரிந்த நிலையில் கார் ஒன்றில் இருந்து சடலம் மீட்பு!

கொழும்பு கொஹுவல, ஆசிரி மாவத்தை பகுதியில் எரிந்த நிலையில் காரொன்றில் இருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

அந்த பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய இளம் வர்த்தகர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு 11.30 மணியளவில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய எரிந்த நிலையில் காணப்பட்ட காரை சோதனையிட்ட போது, உள்ளே சடலம் இருப்பது தெரியவந்ததாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

சடலம் தீயில் எரிந்து கருகியிருந்ததாக பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக கொஹுவல பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருவதுடன், அரச இரசாயன பகுப்பாய்வு பிரிவினர் அந்த இடத்திற்கு சென்று ஆராயவுள்ளனர்.