ஈஸ்டர் தாக்குதலுக்கு நேரடியாகப் பொறுப்புக் கூற வேண்டியவர்கள், உதவியவர்கள் மற்றும் பொறுப்புக்களைத் தவறவிட்டவர்கள் தொடர்பில் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு அமைய சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், சட்டமா அதிபருக்கு அதிகாரத்தை வழங்குமாறும் கத்தோலிக்க பேராயர்கள் பேரவை வலியுறுத்தியுள்ளது.
ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை தொடர்பில் தாம் ஆராய்ந்து பார்த்ததாகவும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையில் மறைக்கப்பட்ட 22 ஆவணங்களையும் சட்டமா அதிபரிடம் உடனடியாக கையளிக்குமாறும் கத்தோலிக்க பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.
பொறுப்புக்கூற வேண்டிய தரப்பினர் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை அவ்வாறே நடைமுறைப்படுத்துமாறும் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.