January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான அறிக்கைக்கு எதிராக சரத் பொன்சேகா நீதிமன்றத்தில் மனு தாக்கல்

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அதிகாரமற்றதாக அறிவிக்கக் கோரி, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று ரிட் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

குறித்த ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பெரும்பாலான குற்றச்சாட்டுக்களுக்குப் ´பொறுப்புக் கூற வேண்டியவராக´ தனது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் சரத் பொன்சேகா மனுவில் தெரிவித்துள்ளார்.

‘ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்த விதம் முற்றுமுழுதாக சட்டத்திற்கு முரணானது’ என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ஆணைக்குழு உறுப்பினர்கள் தமக்கு வழங்கப்பட்ட கடமைகளுக்கு அப்பால் சென்று, செயற்பட்டுள்ளதாகவும் சரத் பொன்சேகாவின் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.