அங்குணுகொலபெலெஸ்ஸ சிறைச்சாலையில் உள்ள ரஞ்சன் ராமநாயக்கவுடன், பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா செல்பி புகைப்படம் எடுத்து, சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா, சிறைச்சாலையில் உள்ள ரஞ்சன் ராமநாயக்கவை நேற்று சுகம் விசாரிக்கச் சென்றுள்ளார்.
இதன்போது, அவர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் செல்பி புகைப்படமொன்றைப் எடுத்து, சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்க இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, குறித்த இடத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த உத்தியோகத்தரை பணி நீக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.