
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு அருட்தந்தை சக்திவேல் மற்றும் மனித உரிமை ஆவலர்கள் பலரும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் நல்லூர் – நல்லை ஆதீனம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டம் 10 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.
இந்த போராட்டத்திற்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், அரசியல் பிரசியல் பிரதிநிதிகள், சிவில் அமைப்பினர், மத தலைவர்கள் எனப்பலரும் தனது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர்.
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதினூடாக அரசாங்கத்தினால் புரியப்பட்டுள்ள போர்க் குற்றங்கள், மனித நேயத்திற்கு எதிரான குற்றங்கள், மற்றும் தமிழ் இனத்திற்கு எதிராக இனவழிப்பு என்பவற்றுக்கு சர்வதேச நீதியை வேண்டி இந்த சுழற்சி முறையிலான போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.