கொவிட் தொற்று நிலைமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தொழில்களை இழந்து துபாயில் நிர்க்கதியாகியுள்ள இலங்கையர்களை உடனடியாக நாட்டுக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.
எக்ஸ்போ துபாய் 2020 கண்காட்சியில் பங்கேற்க துபாய் சென்றுள்ள நாமல் ராஜபக்ஷ , நாட்டிற்கு வரமுடியமால் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் முகாம்களில் தங்கியுள்ள இலங்கையர்கள் குழுவொன்றை சந்தித்துள்ளார்.
இதன்போது அங்குள்ள இலங்கையர்கள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அமைச்சருக்கு எடுத்துக்கூறியுள்ளனர்.
இதன்போது இவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க நடவடிக்கையெடுப்பதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடன் இணைந்து உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அமைச்சரின் உத்தியோகப்பூர்வ டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.