July 2, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சுவிஸ் தூதரக பணியாளருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல்

உண்மைக்குப் புறம்பான முறைப்பாடொன்றை மேற்கொண்ட குற்றச்சாட்டில் இலங்கைக்கான சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றிய கானியன் பெனிஸ்டருக்கு எதிராக இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து தான் சிலரால் கடத்தப்பட்டு, பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டதாக பெனிஸ்டர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

எனினும், கானியன் போலியாக முறைப்பாடு பதிவுசெய்துள்ளார் என்று சட்டமா அதிபர் திணைக்களம் குற்றப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

குறித்த வழங்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றம்சாட்டப்பட்டுள்ள கானியன் பெனிஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

இதன்போது, சட்டமா அதிபர் மூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரம், அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அத்தோடு, குற்றம்சாட்டப்பட்டுள்ளவரை முன் பிணையில் விடுதலை செய்வதற்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேநேரம், இதுதொடர்பான வழக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 4 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதும் குறிப்பிடத்தக்கது.