ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் அஷோக அபேசிங்க, தெரிவித்த சர்ச்சைக்குறிய கருத்து தொடர்பில் வாக்கு மூலம் ஒன்றை பதிவு செய்ய அவர் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளாத பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
அண்மையில், மக்கள் சந்திப்பொன்றில் பேசிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அபேசிங்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோரே ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களை திட்டமிட்டதாக கூறியிருந்தார்.
அவர்களின் திட்டத்திற்கான நிதியுதவி நிசங்க சேனாதிபதியால் வழங்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இவரின் கருத்துக்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும்படி, அறு பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு ஞாயிற்றுக்கிழமை முறைப்பாடு செய்துள்ளனர்.
குறித்த முறைப்பாட்டில், அபேசிங்கே ஆற்றிய உரை முற்றிலும் ஆதாரமற்றது எனவும் இது குறித்து முழுமையான விசாரணையை நடத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கூறினார்.
இதற்கமைய அஷோக அபேசிங்க இன்று ஆஜராகுபடி குற்றப் புலனாய்வு பிரிவு அழைப்பு விடுத்திருந்தது.
எனினும் அஷோக அபேசிங்க, இன்று முன்னிலையாகாததையடுத்து அவருக்கு நாளை ஆஜராகுபடி அறிவுறுத்தியுள்ளது.
குறித்த முறைப்பாட்டில், பாராளுமன்ற உறுப்பினர்களான உதாயான கிரிந்திகொட, பிரமித பண்டார தென்னகோன், சஞ்சீவா எதிரமன்னே, மதுர விதான, ஜகத் குமார மற்றும் மிலன் ஜெயதிலக ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.