அரச நிறுவன ஊழியர்கள் அனைவரும் இன்று முதல் வழமைப்போன்று பணிக்குத் திரும்பியுள்ளனர்.
கொரோனா தொற்று நிலைமையை தொடர்ந்து கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் வீட்டில் இருந்து வேலை செய்வதற்கு ஊழியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தன.
தற்போது நிலைமை வழமைக்கு திரும்புவதால், இன்று முதல் வீட்டில் இருந்து வேலை செய்யும் காலத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ள அரசாங்கம், அனைத்து ஊழியர்களையும் வழமைப் போன்று அலுவலகங்களுக்கு சென்று பணியாற்றுமாறு அறிவித்துள்ளது.
இதுதொடர்பான சுற்றறிக்கை அனைத்து அரச நிறுவனத் தலைவர்களுக்கும் அரசாங்க நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னஸ்ரீயின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் சேவையை உரிய முறையில் முன்னெடுத்து நாட்டை வழமை நிலைக்கு கொண்டு வருவதற்கு காலம் ஏற்பட்டுள்ளதாக அந்த சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதனிடையே, அரசாங்க சுற்றறிக்கைகளுக்கு அமைய, சேவைக்கு அழைக்காத காலப்பகுதியில் நிரந்தரமாக்கல், தரமுயர்வு, ஓய்வு பெறல் தொடர்பிலான செயற்பாடுகளை ஏற்புடையாக்குவது தொடர்பிலான அறிவுறுத்தல் பின்னர் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.