இலங்கையில் மேல் மாகாணம் தவிர்ந்த அனைத்து பகுதிகளிலும் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
முன்பு அறிவித்தமைக்கு அமைவாக மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் திறக்கப்படும் என கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்தின் பாடசாலைகளைத் திறப்பதற்கு கல்வி அமைச்சு ஆயத்தமாக இருந்தபோதும் சுகாதார அமைச்சின் அனுமதிக்காக காத்திருப்பதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இன்னும் இரு தினங்களில் மேல் மாகாணத்தின் பாடசாலைகளை ஆரம்பிப்பதா, இல்லையா என்பது குறித்த இறுதி முடிவு அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
பெப்ரவரி 25 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் அனைத்து அரச பாடசாலைகளுக்கும் 2021 ஆம் ஆண்டிற்கான முதலாம் தவணை விடுமுறை வழங்கப்பட்டது.
எனினும் இந்த ஆண்டிற்காக மேல் மாகாண பாடசாலைகள் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை.
இதேவேளை, மேல் மாகாணம் கொரோனா அபாய வலயமாக தொடர்ந்தும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.