சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு சர்வதேச நீதி வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் தீப்பந்த போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி நல்லூர் – நல்லை ஆதீனம் முன்பாக, யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் 9ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது.
அதற்கமைய நீதி வேண்டி இந்த போராட்டம் இடம்பெறும் இடத்திலேயே தீப்பந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சிவகுரு ஆதீன குரு முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள் ஆசியுரையோடு ஆரம்பித்த இந்த தீப்பந்த போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிவில் சமுக அமைப்பினர், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர்.