நுவரெலியா மாவட்டத்தின் ஹட்டன், டிக்கோயா பட்டல்கலை மேற்பிரிவு தோட்டத்தில் வீசிய சுழல் காற்றால் அந்த தோட்டத்தில் உள்ள 23 குடியிருப்புக்கள் சேதமடைந்துள்ளன.
அந்தப் பகுதியில் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட மரங்கள் மினி சூறாவளி காரணமாக முறிந்து வீழ்ந்துள்ளன. இதனால் வீடுகள் பல சேதமடைந்துள்ளன.
அத்துடன் மின் கம்பிகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதால் பிரதேசத்தில் மின்சாரமும் தடைப்பட்டுள்ளன.
அந்தப் பகுதிக்கு சென்ற நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் கே.கே. ரவி பாதிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டதுடன், பாதிக்கப்பட்ட வீடுகளை புனரமைக்க இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் கவனத்திற்கு கொண்டு வந்து நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.