
அரசின் நிகழ்ச்சி நிரலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி செயற்படுவதாக யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் குற்றச்சாட்டியுள்ளார்.
இன்றையதினம் யாழ்.மாநகர சபையில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ச குடும்பத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப யாழ் மாநகர சபையினை கலைத்து அரசிற்கு சார்பாக இந்த மாநகர சபையை பொறுப்பேற்பதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் செயற்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் 2015 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ஷ ஐனாதிபதி தேர்தலில் வெல்ல வேண்டும் என்பதற்காக வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்கும் படி வேண்டுகோள் விடுத்ததாக தெரிவித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலிலும் கோட்டாபய ராஜபக்ஷவை வெல்ல வைப்பதற்காக பல பிரயத்தனங்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் செய்ததாகவும் யாழ் மாநகர முதல்வர் கூறியுள்ளார்.
அதேபோல் தற்போது மாநகர சபையினை கலைப்பதற்காக மகிந்த குடும்பத்தின் கைக்கூலியாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சிலர் செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.