July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தோட்டத் தொழிலாளர்களுக்கு காணிகளைப் பிரித்துக் கொடுப்பதே நிரந்தரத் தீர்வு என்கிறார் திகாம்பரம் எம்பி

கூட்டு ஒப்பந்தத்தின் மூலமும் சம்பள நிர்ணய சபையின் ஊடாகவும் 1000 ரூபா பிரச்சினை தீர்க்கப்படாது என்று பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், தொழிலாளர்களுக்கு தோட்ட காணிகள் பிரித்துக் கொடுத்து, தேயிலைக் கொழுந்தை தோட்ட நிர்வாகம் வாங்குவதே சரியான தீர்வாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹட்டனில் இடம்பெற்ற தொழிலாளர் தேசிய சங்கத்தின் தோட்ட குழுத் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது, தோட்ட தொழிலாளர்கள் இன்று கூட்டு ஒப்பந்தத்தின் மூலமும், சம்பள நிர்ணய சபையின் ஊடாகவும் ஏமாற்றப்பட்டுள்ளதுடன், அரசாங்கம் 1000 ரூபா அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானியையும் வெளியிடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில்இ 15 நாட்கள் மாத்திரமே வேலை வழங்கவுள்ளதாக கம்பனிகள் அறிவித்துள்ளதாகவும், 1000 ரூபா விடயத்தில் கம்பனிகள் நாடகமாடுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தோட்ட மக்கள் உண்மையான தலைவர்களைப் புரிந்துக்கொள்ள வேண்டும் என்றும் 20 பேர்ச்சஸில் வீடு கட்டுவதாகக் கூறியவர்கள் தொடர்ந்தும் 7 பேர்ச்சஸிலேயே உள்ளதாகவும் திகாம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.