January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உலக வல்லரசான அமெரிக்காவாலும் 9/11 தாக்குதலை தடுக்க முடியவில்லை என்கிறார் மைத்திரிபால சிறிசேன

உலக வல்லரசான அமெரிக்காவால் ஒசாமா பின் லாடனின் செப்டம்பர் 11 தாக்குதலைத் தடுத்துக்கொள்ள முடியாமல் போனதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பௌத்த நூலகமொன்றுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர், “ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு, தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்டதாகவும், இன்று அது பொதுபல சேனாவை இலக்கு வைத்துள்ளதாகவும்” குற்றம்சாட்டியுள்ளார்.

அதற்கு, “தொழில்நுட்ப ரீதியாக வளர்ச்சி கண்ட அமெரிக்க புலனாய்வுத் துறைக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னரே செப்டம்பர் 11 தாக்குதல் தொடர்பான தகவல்கள் கிடைத்திருந்தும், அவர்களால் தாக்குதலைத் தடுத்து நிறுத்த முடியாமல் போனது” என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதிலளித்துள்ளார்.

தீவிரவாதமும், இஸ்லாமிய அடிப்படைவாதமும் இலங்கை மாத்திரமன்றி முழு உலகமும் முகங்கொடுத்து வரும் பிரச்சினையொன்று என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.