இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களுடன் நேரடி தொடர்புடைய நபர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு வலியுறுத்தி கத்தோலிக்க சபை அறிவித்துள்ள ‘கறுப்பு ஞாயிறு’ அனுஷ்டிப்புக்கு மலையகத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களும் பிரார்த்தனையில் பங்கேற்றுள்ளன.
அந்தவகையில், ஹட்டன் திருச்சிலுவை தேவாலயத்தில் பங்குத் தந்தை நியூமன் பீரிஸ் தலைமையில் விசேட திருப்பலி நடைபெற்றுள்ளது.
அத்தோடு, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி குறிப்பிட்டளவான கத்தோலிக்க மக்கள் கறுப்பு உடைகளை அணிந்து, வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார்கள்.
மேலும், மலையகத்தில் உள்ள அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் இதற்கு ஆதரவு வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.