இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தீவிரவாதத் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டக் கோரி நாடளாவிய ரீதியில் இன்று ‘கறுப்பு ஞாயிறு’ போராட்டம் நடத்தப்படுகின்றது.
ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரிகள் கண்டறியப்படாமலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி நிலைநாட்டப்படாமலும் இருக்கின்ற நிலையில், இந்தப் போராட்டத்துக்கு கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் அழைப்பு விடுத்திருந்தார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை வணக்க வழிபாடுகளுக்காக நாடளாவிய ரீதியில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் ஒன்றுகூடிய மக்கள், கறுப்பு ஆடைகள் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேநேரம், குறித்த தாக்குதலுக்கு நீதி நிலைநாட்டப்படுவதை வலியுறுத்தி, நாட்டின் ஏனைய சமூகத்தவர்களும் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.