பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து பதுளை- கொழும்பு பிரதான வீதியின் எல்ல பகுதியில் குடைசாய்ந்ததில் 35 பயணிகள் காயமடைந்துள்ளனர்.
பதுளை பகுதியிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்து பாதையை விட்டு விலகி, சுமார் 10 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
பேருந்து சாரதியின் கவனயீனம் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் 10 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் பதுளை மற்றும் தாமோதர வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் எல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.