July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது இருபது 20 போட்டியில் இலங்கை 43 ஓட்டங்களால் வெற்றி

photo credits: Facebook/ Sri Lanka Cricket

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது இருபது 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 43 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.

161 ஓட்ட இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 18.4 ஓவர்கள் நிறைவில் 117 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.

இதனடிப்படையில், மூன்று போட்டிகளைக் கொண்ட இருபது 20 தொடரில் இரண்டு அணிகளும் 1-1 என்ற அடிப்படையில் சமநிலையில் உள்ளன.

இலங்கை அணி சார்பில் தனுஷ்க குணதிலக 56 ஓட்டங்களையும் பெத்தும் நிஸ்ஸங்க 37 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

பந்துவீச்சில், சந்தகன், வனிந்து ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களையும், துஷ்மந்த சமீர இரண்டு விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளனர்.

மேற்கிந்திய தீவுகள் சார்பில் ஒபெட் மெகோய் 23 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

நாளை நடைபெறவுள்ள மூன்றாவதும் இறுதியுமான இருபது 20 போட்டி, தொடரைக் கைப்பற்றும் அணியைத் தீர்மானிப்பதாய் அமையவுள்ளன.