இலங்கையில் இன்று கொரோனாவால் உயிரிழந்த ஒன்பது பேரின் உடல்கள்
நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.
இலங்கையில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் உடல்களை சுகாதார அமைச்சின் சுற்று நிருபத்துக்கமைய அடக்கம் செய்யும் பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மஜ்மா நகரில் கொரோனா தொற்று மூலம் மரணித்த முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு சிபார்சு வழங்கப்பட்டுள்ள நிலையில் இன்று மாலை, முதலாவது ஜனாஸா அடக்கம் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து இன்று இரவு 08.30 மணி வரை ஒன்பது ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.
இவற்றில் கொரோனா தொற்றுடன் மரணித்த அட்டாளைச்சேனை, காத்தான்குடி, அக்கறைப்பற்று, கோட்டமுனை ஆகிய பிரதேசங்களை சேர்ந்த நால்வரினதும் சாய்ந்தமருதை சேர்ந்த மூவரினதும், ஏறாவூரைச் சேர்ந்த இருவரினதும் சடலங்கள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 bodies of Covid deceased arriving for burial at Oddamavadi. We were provided a vantage point just outside of the enclosed area to view the burial procedure. #BurialsResumed pic.twitter.com/9C8HQJV4ob
— Ali Zahir Moulana (@alizmoulana) March 5, 2021