வனவள திணைக்களத்தால் கையகப்படுத்தப்பட்ட காணியை விடுவிக்க கோரி, மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பெண்ணொருவர் அத்துமீறி நுழைய முற்பட்டுள்ளார்.
எனினும், குறித்த பெண்ணை பாதுகாப்புத் தரப்பினர் தடுத்து நிறுத்தியதில் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முருங்கன்பிட்டி பகுதியை சேந்த பெண்யொருவர், அவருக்குச் சொந்தமான 15 ஏக்கர் காணியை வனவள திணைக்களம் கையகப்படுத்தியுள்ளதாகவும், ஐந்து வருடங்களும் மேலாக தான் நீதிக்காகப் போராடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தனது பிரச்சினை தொடர்பாக பிரதேச செயலகம், அமைச்சர்கள், ஒருங்கிணைப்புக் குழு, ஜனாதிபதி செயலகம், மாவட்ட செயலகம் உட்பட பல்வேறு இடங்களுக்கும் நேரில் சென்று முறையிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பல வருடங்களாக நீதி கிடைக்காத நிலையில் ஆளுநரிடம் பிரச்சினையை எடுத்துக்கூற முற்பட்டதாகவும் குறித்த பெண் தெரிவித்துள்ளார்.
ஒருங்கிணைப்புக் கூட்ட நிறைவில் தனது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை வட மாகாண ஆளுனர் பி.எஸ்.எம்.சாள்ஸிடம் கையளிக்க ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளார்.