January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”அனைத்து தரப்பினரும் உலக நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்க முன்வரவேண்டும்”

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டுமென, அனைத்து தரப்பினரும் உலக நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்க முன்வரவேண்டும் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

யாழ்ப்பாணம் நல்லை ஆதினம் முன்பாக ஐந்தாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்றி முறையிலான உணவுத் தவிர்புப் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் பா.உஜாந்தனே இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி குறித்த உணவு தவிர்ப்பு போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

குறித்த போராட்டத்திற்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், அரசியல் பிரதிநிதிகள், சிவில் அமைப்பினர், மத தலைவர்கள் என பரும் தனது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் யாழ். பல்லைக்கழக மாணவர் ஒன்றியமும் போராட்டத்திற்கு ஆதரவளித்துள்ளதுடன், சர்வதேச நாடுகளுக்கு அழுதத்தம் கொடுக்க அனைத்து தரப்பினரும் முன்வர வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளது.