இலங்கைக்கு எதிரான முதலாவது இருபது 20 கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி இலகு வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.
132 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, அகில தனஞ்சயவின் ஆறு பந்துகளுக்கு கிரொன் பொலார்டின் ஆறு சிக்ஸர்கள் மூலம் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 131 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.
ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர்கள் அடித்த மூன்றாவது கிரிக்கெட் வீரராக பொலார்ட் இடம்பிடித்துள்ளார்.
இதேநேரம், அகில தனஞ்சய ஹெட்ரிக் விக்கெட்டுக்களைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் எவின் லெவிஸ், கிறிஸ் கெய்ல் மற்றும் நிகொலஸ் போரன் ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்தே, தனஞ்சய ஹெட்ரிக் பெற்றுக்கொண்டுள்ளனர்.
இருபது 20 போட்டிகளில் 4 ஹெட்ரிக் விக்கெட்டுக்களைப் பெற்று, உலக தரவரிசையில் இலங்கை அணி முன்னிலையில் இருக்கின்றது.
https://twitter.com/hershybru/status/1367354800304717827?s=20
இதற்கு முன்னர் ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர்களைப் பதிவுசெய்திருந்த இந்திய அணியின் யுவராஜ் சிங் மற்றும் தென் ஆபிரிக்க அணியின் ஹேர்ஷல் கிப்ஸ் ஆகியோர் கிரொன் பொலார்டுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
Welcome to the club @KieronPollard55 #sixsixes you beauty !!!⭐️ 🌟 ⭐️🌟⭐️🌟
— Yuvraj Singh (@YUVSTRONG12) March 4, 2021